நடிகர் விஜய் ரூ5000 கோடியை விட்டு விட்டு அரசியலுக்கு வருகிறார்... புஸ்ஸி ஆனந்த் பேச்சு!

தமிழ் திரையுலகில் இளையதளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய் பிப்ரவரியில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போட்டிருக்கும் சபதம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைவர் பரணி பாலாஜியின் மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி சிறப்பித்தார். அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். அந்த பேச்சின் நடுவில் கடந்த 30 வருடமாக நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். பல ஏழை மக்களுக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ உதவி செய்து கொண்டிருக்கின்றது. தளபதி என்று சொன்னாலே நமக்கு எனர்ஜி கிடைக்கும். நாம் கண்டிப்பாக அந்த தளபதியை தமிழகத்தின் முதல்வராக உட்கார வைக்க வேண்டும். உங்களுடைய ஒவ்வொருவரின் உழைப்பால் தான் தமிழ்நாட்டினுடைய இலக்கு வெற்றி பெறும்.
2026க்காக உண்மையாக மக்களுக்காக உழைக்க வேண்டும், மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். தளபதியை 2026 ல் முதல்வர் ஆக்குவோம். விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். கட்சி சார்பாக விஜய் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். நிர்வாகிகள் கட்சியின் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக புது செயலியும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கோட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘தளபதி 69’ க்கு பிறகு விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்ட இருக்கிறார்
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!