மாஸ் வீடியோ... நடிகர் விஜய் 2 மாத கைக்குழந்தைக்கு ’தமிழரசி’ என பெயர்சூட்டல் !

 
தவெக
 

தவெக சார்பில் இன்று 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 21 மாவட்ட மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் இன்று 19 மாவட்ட மாணவர்களுக்கு 2 ம் கட்ட கல்வி விருது வழங்குகிறார். சென்னை திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தில் இந்த விழா நடைபெற்று வருகிறது.

 அதிகாலையே இங்கு வருகை தந்த நடிகர் விஜய் 725 மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், விருதுகளையும் வழங்கினார். பெற்றோர்களுடன் சுமார் 3500 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.மொபைல் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது.  த.வெ.க. நிர்வாகிகள் மாணவர்கள், பெற்றோரை பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர்.

விஜய்

கல்வி விருது வழங்கும் விழாவில் 2 மாத பெண் குழந்தைக்கு பெயரிட பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று ‘தமிழரசி’ என பெயர் சூட்டினார்  தவெக தலைவர் விஜய். தலைவரால்  பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காகவே தன் மகளுக்கு இதுவரை பெயர் சூட்டாமல் காத்திருந்ததாக குழந்தையின் தந்தை கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web