நடிகர் விஜயகுமார் வீட்டில் சோகம்... இயக்குநர் ஹரியின் தந்தை காலமானார்!

 
ஹரி

நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் திடீரென சோகம் சூழ்ந்துள்ளது. நடிகர் விஜயகுமாரின் மருமகனும், பிரபல திரைப்பட இயக்குநருமான ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.

கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த கோபாலகிருஷ்ணன்,சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலை காலமானார். அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இயக்குநர் ஹரியின் தந்தை

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலிக்காக இன்று பிற்பகல் 2 மணி வரை வைக்கப்பட்டிருக்கும் என்றும், அதன் பின்னர், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹரிக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web