கள்ளக்காதலி வீட்டில் நடிகர் விஜய் கட்சி பிரமுகர் மர்ம மரணம்... போலீசார் விசாரணை!

 
சூர்ய பிரகாஷ்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சங்கர் (56). இவர் தேமுதிக முன்னாள் நகர செயலாளரான இவரது மகன் சூரியபிரகாஷ் (27). அதே பகுதியில் கூரியர் சர்வீஸ் நிறுவனம் ஒன்றிற்கு கார் ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி, மகன் உள்ளனர். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தின் அருகே உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவருடன் சூரியபிரகாசுக்கு தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டதால் சூரியபிரகாசுடன் அந்த பெண் தனியே குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மாணவர் தற்கொலை

இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அந்த பெண்ணின் வீட்டுக்கு சூரியபிரகாஷ் சென்ற போது இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டு, வீட்டில் இருந்த பொருட்களை சூரிய பிரகாஷ் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இதில் பயந்துபோன அந்த பெண் குழந்தைகளை அருகிலுள்ள வீட்டில் விடுவதற்காக வெளியே குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது சூர்யபிரகாஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பள்ளி மானவி தற்கொலை

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூரிய பிரகாஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சூர்யபிரகாஷின் மனைவி பார்வதி, இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில், தன்னுடைய கணவரை அடித்து கொலைச் செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web