அச்சச்சோ... என்னாச்சு... நடிகை ஐஸ்வர்யா ராய் கையில் கட்டுப்போட்ட நிலையில், கேன்ஸ் பயணம்!

 
ஐஸ்வர்யா ராய்
 

நடிகை ஐஸ்வர்யா ராய், கையில் எலும்பு முறிவுக்கு கட்டுப்போட்ட நிலையில், தனது மகளுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நேற்றிரவு கிளம்பி சென்றிருக்கிறார். நடிகை ஐஸ்வர்யாவின் கையில் கட்டுப் போட்டிருப்பதைப் பார்த்த ரசிகர்கள், ’ஐஸ்வர்யாவுக்கு கையில் என்ன ஆச்சு?’ எனப் பதறியபடி சமூக வலைத்தளங்களில் தங்களது கவலையைத் தெரிவித்து வருகின்றனர். 


பிரான்ஸில் 77வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14ம் தேதி தொடங்கிய நிலையில், கேன்ஸ் படவிழாவின் ரெட்கார்ப்பட்டை அலங்கரிக்கும் பிரபலங்களில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா ராய் நேற்றிரவு மும்பை விமான நிலையத்தில் இருந்து கேன்ஸ் புறப்பட்டு சென்றார். 
ஒவ்வொரு வருடமும் தவறாமல்  கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா ராய், இந்த முறை கையில் அடிபட்ட நிலையில், கட்டு போடப்பட்ட நிலையில் கிளம்பிச் சென்றதைப் பார்த்த ரசிகர்கள் பதறிப் போயுள்ளனர். 

ஐஸ்வர்யா ராய்
‘அச்சச்சோ...ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு? அவருக்கு சீக்கிரமே குணமாக வேண்டும்’ என்று இணையத்தில் சொல்லி வருகின்றனர். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது சரியாகி வருவதாகவும் பயண நேரத்தில் அதிக பிரச்சனை ஏற்படாமல் இருக்கவே கட்டுப் போட்டுள்ளதாகவும் அவரது நெருங்கிய நட்பு வட்டாரம் தெரிவிக்கிறது. 
கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா, இந்த வருடமும் மிஸ் ஆகக் கூடாது என்பதற்காக கையில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் கிளம்பியிருக்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web