பிரபல பாகிஸ்தான் நடிகை மர்ம மரணம்... சடலமாக மீட்பு!
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகை ஹுமைரா அஸ்கர் அலி, அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தானின் பிரபல நடிகை ஹுமைரா அஸ்கர் அலி(32), கராச்சியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த நிலையில், அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சமீப காலமாக தொடர்பில்லாமல் இருந்து வந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் வாடகை வசூலிக்க அவரது வீட்டிற்கு சென்றுப் பார்த்த போது அவர் இறந்த நிலையில் கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடிகையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் உயிரிழந்து 2 வாரங்கள் வரையில் ஆகியிருக்கலாம் என்று கூறிய போலீசார், மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
