மனநலம் முக்கியம் ... 90 மணி நேரம் வேலை.. L&T நிறுவனருக்கு ஷொட்டு வைத்த நடிகை தீபிகா படுகோன் !

 
தீபிகா படுகோன் எல் அண்ட் டி


இந்தியாவின் முண்ணனி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான லார்சன் & டூப்ரோவின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், வாரத்தில் 90 மணி நேர வேலை என கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு பல தரப்பட்ட பிரபலங்களும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில்  நடிகை தீபிகா படுகோன் கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தீபிகா படுகோன்  சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

தீபிகா படுகோன் எல் அண்ட் டி

இந்நிலையில், “வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்” என ஊழியர்களுக்கு அறிவுறுத்திய L & T தலைவரை, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கடுமையாக விமர்சித்துள்ளார்.அதாவது, L&T  நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் “ஒரு வாரத்துக்கு 90 மணிநேரம் நீங்கள் வேலை செய்தால்தான் இந்திய பொருளாதாரம் வளரும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணி புரியலாம்.   ஞாயிற்றுக் கிழமை வீட்டில் என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வளவு நேரம் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டே இருப்பீர்கள்?நான் ஞாயிறு அன்றும் வேலை செய்கிறேன்” என கூறியுள்ளார்.    

தீபிகா படுகோன் எல் அண்ட் டி

L&T நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியனின் இந்த கருத்துக்கு  நடிகை தீபிகா படுகோன்  தனது இன்ஸ்டா பக்கத்தில்  தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “இத்தகைய மூத்த பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது அதிர்ச்சியை அளிக்கிறது. அதோடு, Mental Health Matters.” மனநலம் முக்கியம் என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பதிவிட்டுள்ளார்.
 
ஒரு தொழிலதிபர் இதுபோன்ற தெளிவற்ற அறிக்கைகளை வெளியிடுவதும், இந்தியாவின் பணியாளர்களிடம் இருந்து உண்மையற்ற கோரிக்கைகள் வைப்பதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. ஏற்கனவே இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்ஆர் நாராயண மூர்த்தி, இந்தியாவை வளர்ச்சி மற்றும்  முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வாரத்தில் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web