பாஜகவில் இருந்து விலகுகிறேன்... நடிகை கௌதமி பரபரப்பு... !!

 
கௌதமி

நடிகை கௌதமி பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து விடுத்த அறிவிப்பில் ”நான் இன்று  என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன். பாஜக  தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை என்பது மட்டுமல்லாமல், அவர்களில் பலர் எனது நிலத்தை மோசடி செய்த நபருக்கு தீவிரமாக ஆதரவு கொடுத்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என  பல மொழிகளில் சுமார் 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை கௌதமி    பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். பாஜகவிற்கு ஆதரவாக பல்வேறு தேர்தல் பிரச்சாரமும் செய்துள்ளார்.  அதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், என்னுடைய மகளின் பராமரிப்பு செலவு மற்றும் என்னுடைய மருத்துவ செலவுகளுக்காக எனக்கு சொந்தமான நிலத்தை  கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் அழகப்பனிடம்  விற்றுத் தரச் சொல்லி   20 வருடங்களுக்கு முன்பு ஆவணங்களை கொடுத்து இருந்தேன்.  

கௌதமி

என்னை ஏமாற்றும் நோக்கத்தில் போலி ஆவணங்களை தயாரித்து அவரும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சுமார் ரூ25 கோடி  மதிப்பிலான இடங்களை என்னிடம் இருந்து ஏமாற்றி விற்றுள்ளதாக தெரிவித்து இருந்தார்.    மிகவும் கனத்த இதயத்துடனும், ஆழ்ந்த ஏமாற்றத்துடனும் நான் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன். நாட்டை கட்டியெழுப்பும்   எனது முயற்சிகளுக்கு பங்களிப்பதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் பாஜகவில்  சேர்ந்தேன்.  இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறேன். இப்போது கூட கட்சியும், தலைவர்களும் ஆதரவு தரவில்லை. அதே நேரத்தில் என்னை மோசடி    செய்த நபருக்கு தீவிரமாக ஆதரவாக உள்ளனர்.  

கௌதமி

நான் 17 வயதிலிருந்தே   சினிமா, தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் மீடியா என 37 வருடங்களாக எனது தொழில் வாழ்க்கை நீடித்து வருகிறது.    சி.அழகப்பன் என்பவர் எனது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை மோசடி செய்ததை  எண்ணி அதிர்ச்சி அடைந்துள்ளேன்.  
20 ஆண்டுகளுக்கு முன்பு எனது உடல் நிலை பாதிப்பு,பெற்றோரை இழந்து தனிமையில் கைக்குழந்தையோடு தவித்தேன் அப்போது எனக்கு உதவுவதாக தெரிவித்த அன்பழகனிடம் எனது சொத்துக்களை விற்றுக்கொடுக்க கொடுத்தேன். ஆனால் தற்போது எனது நிலத்தை அபகரித்து மோசடி செய்ததை தற்போது தான் அறிந்தேன்.  நான் உழைத்து சம்பாதித்த பணம், சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை மீட்டெடுப்பதற்காக பல்வேறு சட்ட போராட்டங்களை மேற்கொண்டேன்.
ஆனால் தொடர்ந்து இழுத்தடிப்பு நடவடிக்கைகள் தான் தொடர்ந்து வருகிறது.   2021  சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில்  ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து  கடைசி நிமிடத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து கட்சி மீதான உறுதிப்பாட்டை காப்பாற்றினேன். எனினும் 25 ஆண்டுகாலம் கட்சிக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்தபோதும், எனக்கு முற்றிலுமாக ஆதரவு இல்லை.  அழகப்பன் சட்டத்திலிருந்து தப்பிக்கவும், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 40 நாட்களாக அவர் தலைமறைவாக இருப்பதற்கும் சில மூத்த பாஜக உறுப்பினர்கள் தான் உதவி செய்துள்ளனர். இதனை  அறிந்து நொறுங்கிப் போனேன். எனவே மிகுந்த வேதனையில் பாஜகவில் இருந்து விலகுகிறேன்” என நடிகை கௌதமி  தெரிவித்துள்ளார்

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web