நிலமோசடி வழக்கு: நடிகை கெளதமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

 
கௌதமி


தனக்கு சொந்தமான நிலம் மோசடியாக விற்கப்பட்ட விவகாரத்தில் திரைப்பட நடிகை கெளதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். திரைப்பட நடிகை கவுதமி மற்றும் அவரது அண்ணன் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு சொந்தமான நிலம் திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்ய கடந்த 2015ம் ஆண்டு தனது உதவியாளராக இருந்த அழகப்பன் என்பவரிடம் கூறி விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளார்.

கௌதமி

இதனைத் தொடர்ந்து இந்நிலத்தை அழகப்பன் பேருக்கு சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடிகை கெளதமி பவர் உரிமையும் செய்து கொடுத்துள்ளார். ஆனால் அழகப்பன் தனது நண்பர்கள் ரகுநாதன், சுகுமாரன், பலராமன் ஆகியோருடன் சேர்ந்து மேற்படி சொத்துகளை அபகரித்துக் கொண்டு அதற்கு உண்டான பணத்தையும் தராமல் மோசடி செய்து வருவதாக புகார் எழுந்தது.இதனால் பாதிக்கப்பட்ட நடிகை கெளதமி, அழகப்பன் தன்னை ஏமாற்றியதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். நடிகை கெளதமி அளித்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அழகப்பனை குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர்.போலீஸ்இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி அழகப்பன் மனு தாக்கல் செய்திருந்தார். நடிகை கெளதமியும் இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வழக்கு குறித்தும், தான் ஏமாற்றப்பட்டது குறித்தும் விளக்கம் அளித்தார். இந்த வழக்கில் அழகப்பனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று காவல்துறை தரப்பிலும், நடிகை கெளதமி தரப்பிலும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக அழகப்பனை 5 நாள் காவலில் எடுக்கவும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மனு அளித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!