நில மோசடி புகார்... நடிகை கௌதமியிடம் போலீசார் ஒரு மணி நேரம் விசாரணை!

 
கௌதமி

ராமநாதபுரத்தில் நிலம் வாங்கித் தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்த நபர் மீது திரைப்பட நடிகை கௌதமி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்ததன் பேரில் விசாரணை.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சுவத்தான் என்ற பகுதியில் பல ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக காரைக்குடி பகுதியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் நடிகை கௌதமிடம் ரூபாய் 3 கோடி பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் சுமார் 64 ஏக்கர் நிலம் ரூ 57 லட்சம் மதிப்பில் மட்டும் வாங்கிக் கொடுத்துள்ளார். 

கௌதமி

அந்த நிலமும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது. போலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக தெரிய வந்துள்ளது. ஆகவே நிலத்தை போலியாக வாங்கிக் கொடுத்தது மற்றும் பணத்தை ஏமாற்றியது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் ஏற்கனவே நடிகை கௌதமி புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறைக்கு வழக்கு விசாரணைக்கு இன்று வந்தது. இது தொடர்பாக நடிகை கௌதமி ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வழக்கு குறித்தும் தான் ஏமாற்றப்பட்டது குறித்தும் காவல்துறை அதிகாரியிடம் நேரடியாக விளக்கம் அளித்தார். இது குறித்து காவல்துறை தீவிரமாக ஆராய்ந்து மோசடி நடைபெற்றது உறுதி செய்த பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கௌதமி

இது குறித்து திரைப்பட நடிகை கௌதமி செய்தியாளர்களிடம் கூறுகையில் நிலம் வாங்கி தருவதாக தான் ஏமாற்றப்பட்டதாகவும் தவறான ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். மேலும் என்ன மோசடி யார் மீது குற்றச்சாட்டு என கேட்டபோது விசாரணை நடைபெற்று இருப்பதால் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web