சினிமாவைப் போல அரசியலில் ஜெயிப்பேன்.. வேட்புமனு தாக்கல் செய்தார் நடிகை கங்கனா ரனாவத்!

 
கங்கனா ரனாவத்
சினிமாவில் வெற்றி பெற்றதைப் போல அரசியலிலும் வெற்றி பெறுவேன் என்று பேட்டியளித்த நடிகை கங்கனா ரனாவத், இமாச்சல பிரதேச மாநிலம், மண்டி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவரது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.


 


 

இந்நிலையில் இத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று கங்கனா ரனாவத் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கங்கனாவின் தாய் ஆஷா ரனாவத், கங்கனா சகோதரி ரங்கோலி ரனாவத் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் நிகழ்வின்போது உடனிருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு கங்கனா ரனாவத் கூறுகையில், “மண்டி நகர மக்களும் அவர்கள் என் மீது கொண்ட அன்பும் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. நம் நாட்டில் பெண்கள் எல்லா துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மண்டியில் கருக்கொலை சம்பவங்கள் அதிகம். இன்று, மண்டியைச் சேர்ந்த பெண்கள் ராணுவம், கல்வி மற்றும் அரசியல் துறையில் உள்ளனர்” என்றார்.
அவரிடம் காங்கிரஸ் கட்சி பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, "காங்கிரஸ் கட்சியின் தேச விரோத மனநிலை நாட்டிற்கு கவலை அளிக்கிறது" என்றார்.

கங்கனா ரனாவத்

கங்கனாவின் தாய் ஆஷா ரனாவத் கூறுகையில், "கங்கனாவுக்கு ஆதரவாக பொதுமக்கள் இங்கு வந்துள்ளனர். நிச்சயம் வெற்றி பெறுவோம். அவர் மக்களுக்காக பல பணிகளை செய்துள்ளார். எதிர்காலத்திலும் செய்வார்" என்றார்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி உள்ளிட்ட 4 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் ஜூன் 1ம் தேதி, 7ம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும், அங்கு அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 6 பேர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காலியாக உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்ந்து தேர்தல் நடத்தப்பட உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web