வைரலாகும் புகைப்படம்... நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தவெக தலைவர் விஜய்..!

 
கீர்த்தி சுரேஷ்

  நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் டிசம்பர் 12ம் தேதி கோவாவில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பிரபலங்கள் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில்  நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழில் "ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன்"  என பல படங்களில் நடித்து உள்ளார். 'நடிகையர் திலகம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை  பெற்றது.  அந்த படத்திற்கு தேசிய விருதை பெற்றார். தற்போது அட்லி இயக்கத்தில் உருவான பேபிஜான் என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.  

கீர்த்தி சுரேஷ்

இவர்களின் திருமணம் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. அந்த வைபவத்தில்  நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணத்துக்காக கோவா சென்றிருந்த தவெக தலைவரான நடிகர் விஜய், மணமக்களை வாழ்த்தியுள்ளார்.  திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய் மணமக்களை வாழ்த்தும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web