இன்று காலை நடிகை மீரா நந்தனுக்கு திருமணம்... பிரபலங்கள் வாழ்த்து!

 
மீரா நந்தன்
பிரபல நடிகை மீரா நந்தனுக்கு இன்று காலை கேரள மாநிலம் குருவாயூரில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழில் ’வால்மீகி’, ‘அய்யனார்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மீரா நந்தன், மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே பட வாய்ப்புகளின்றி இருந்து வந்த நடிகை மீரா நந்தன், அதன் பின்னர் துபாயில் ரேடியோ ஒன்றில் தொகுப்பாளராக பணியில் இணைந்தார். 


இந்நிலையில், இன்று காலை அவருக்கு குருவாயூர் கோயிலில் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. பியூ ஸ்ரீஜூ என்பவரத் திருமணம் முடித்துள்ளார். ’என் வாழ்க்கையின் காதல்’ என்று கேப்ஷன் கொடுத்து தனது திருமணப் புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மீரா நந்தன். 

மீரா நந்தன்
சங்கீத், ரிசப்ஷன் எனக் களைக்கட்டிய இந்தத் திருமணக் கொண்டாட்டத்திற்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web