மார்பகத்தைச் சொல்லி கிண்டல் பண்றாங்க.. நடிகை நீலிமா ராணி வருத்தம்!

 
நீலிமா ராணி

இதுவும் கடந்து போகும்னு நாம யாருக்கு வேணா அட்வைஸ் பண்ணலாம். ஆனா நமக்குன்னு ஒரு பிரச்சனை வரும் போது, அது எந்தளவுக்கு மன அழுத்தத்தைத் தரும்னு அனுபவபூர்வமா உணர்ந்தவள் என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகை நீலிமா ராணி. சமூக வலைத்தளத்தில் என்னுடைய மார்பகங்கள் குறித்து கேவலமாக பலரும் கருத்து தெரிவித்து, கிண்டல் செய்து கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். சரி.. இந்த மாதிரியான மனிதர்கள் வாழ்கிற சமூகத்தில் தானே நாமும் இருக்கிறோம் என்று நடிகை நீலிமா ராணி வேதனையோடு தெரிவித்துள்ளார்.

‘தேவர் மகன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, பாண்டவர் பூமி, விரும்புகிறேன், தம், திமிரு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து பரவலான ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதில், “2008- முதல் 2023 வரையிலான என்னுடைய எல்லா வேலைகளும் திருமணத்திற்கு பின்புதான் நடைபெற்றது. நான் வெளியே செல்லும்போது என்னை பார்க்கும் அத்தனை நபர்களும் என் அருகில் வந்து பேச நினைப்பார்கள், பேசுவார்கள், பாராட்டுவார்கள் ஆனால் சில நேரத்தில் சிலர் என்னை திட்டியும் இருக்கிறார்கள்.

Neelima Rani

பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதால் நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று சிலர் இப்பவும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி தான் ஒரு நாள் ஒரு பாட்டி விமான நிலையத்தில் வைத்து என்னை அந்த திட்டு திட்டினார். நாசமாய் போய்விடுவாய் என்று என்னை சபித்தார். 

என்னை தவறாக விமர்சிப்பவர்கள் பற்றி எல்லாம் நான் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது. அவர்கள் எல்லாம் மனநல மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்கள் தான். எனது இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு நான் இப்படி எடை போட்டு விட்டேன் அதை சுற்றி நிறைய காரணங்கள் இருக்கிறது.

Neelima Rani

ஆனால் சிலர் கமெண்ட்களில் என்னுடைய மார்பகங்கள் பற்றி எல்லாம் கமெண்ட் செய்கிறார்கள். அவர்களுக்கு உடனே நான் எனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருக்கிறேன். அதனால் தான் அப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்று தோன்றும், பிறகு அப்படி சொல்லி என்ன ஆகப்போகிறது என்று நான் அதை கடந்து விடுவேன் என்று வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web