நடிகை ராதிகாவுக்கு டெங்கு... சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!

 
டெங்கு
 

நடிகை ராதிகா டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் 5 நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக  அறிமுகம் ஆனவர்.  நடிப்பு இயக்கம் என தனது தனித்துவமான நடிப்பு திறமை மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். இதுவரை நந்தி விருதுகள், பிலிம்வேர் விருதுகள் உட்பட பல  விருதுகளை பெற்றுள்ளார்.  

பாலிவுட் நடிகர் தமிழை போலவே தெலுங்கிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்த ராதிகா, சின்னத்திரையில் 'சித்தி', 'அண்ணாமலை', 'வாணி ராணி' உட்பட  பல சீரியல்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், நடிகை ராதிகா 2 நாட்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சக்காக அனுமதிக்கப்பட்டார்.  இன்னும் 5 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?