நடிகை ராக்கி சாவந்துக்கு கருப்பையில் கட்டி... புற்றுநோயாகவும் இருக்கலாம்... அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்... ரித்தேஷ் அதிர்ச்சி தகவல்!

 
ராக்கி சாவந்த்

இந்தி திரைப்பட நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான நடிகை ராக்கி சாவந்தின் முன்னாள் கணவர் ரித்தேஷ், நடிகை ராக்கி சாவந்த் கருப்பையில் கட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று முன் தினம் மே 14ம் தேதி நடிகை ராக்கி சாவந்த் மும்பையில் தனியார் மருத்துவமனையில் திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அன்றே நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி, சமூக ஊடக தளங்களில் வைரலானது.

ராக்கிக்கு 'இதயக் கோளாறு' இருப்பதாகவும், அதற்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், ராக்கியின் முன்னாள் கணவர் ரித்தேஷ், ராக்கி சாவந்த் கருப்பையில் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், அது புற்றுநோயாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிப்பதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ராக்கி சாவந்த்

இது குறித்து பேசிய ரித்தேஷ், ராக்கி வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் தொடர்ந்து வலி இருப்பதாக புகார் செய்ததை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும், மருத்துவமனையில் அவர் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனைகளின் முடிவுகள் வருவதற்காக மருத்துவர்கள் காத்திருக்கின்றனர். மருத்துவர்கள் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முன்மொழிந்துள்ளனர். ஆனால் அது புற்றுநோயா இல்லையா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும்" என்று அவர் கூறினார். தற்போது ராக்கியின் உடல்நிலை மோசமாக உள்ளது என்று தெரிவித்தார்.

"ராக்கி தன்னைப் பற்றிய ஒரு உருவத்தை உருவாக்கிக் கொண்டார். அதனால் தான் எப்போதும் நகைச்சுவையாக இருப்பார் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது நகைச்சுவை அல்ல. மக்கள் அவரை நாடக ராணி என்று அழைக்கிறார்கள். ஆனால் இந்த முறை பிரச்சனை தீவிரமாக உள்ளது. அவர் மருத்துவமனையில் மிகவும் மோசமாக இருக்கிறார்" என்று ரித்தேஷ் கூறியுள்ளார். 

மேலும் ராக்கிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web