13 வருடங்களுக்குப் பின் தமிழுக்கு திரும்பும் பிரபல நடிகை... ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்தார்!

 
ஜெயிலர் மேக்னா ராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. பெரும் வெற்றியைப் பெற்ற அந்தப் படத்தின் தொடர்ச்சியாக தற்போது ‘ஜெயிலர் 2’ என்கிற பெயரில் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

முதல் பாகம் போல், இரண்டாம் பாகத்திலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் (கேமியோ ரோல்) மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஜெயிலர்

இந்நிலையில், பிரபல கன்னட நடிகை மேக்னா ராஜ் ‘ஜெயிலர் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2010ம் ஆண்டு வெளியான ‘காதல் சொல்ல வந்தேன்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், பின்னர் ‘உயர்திரு 420’, ‘நந்தா நந்திதா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஜெயிலர்

2012ம் ஆண்டு வெளியான ‘நந்தா நந்திதா’ பிறகு அவர் தமிழ் சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தார். இப்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஜெயிலர் 2’ படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வருவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!