அதிர்ச்சி... நடிகை ‘காதல்’ சந்தியாவின் பண்ணை வீட்டில் அட்டூழியம்... இளம்பெண்ணிடம் ஊழியர்கள் செய்த பகீர் காரியம்!போலீசில் புகார்!

 
காதல் சந்தியா பியர்ல்

கோடை விடுமுறையில் பலரும் குடும்பத்தோடு சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். இது போன்று சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போது ரொம்பவே ஜாக்கிரதையா இருங்க. பாதுகாப்பு விஷயத்தில் கொஞ்சமும் அலட்சியமா இருக்காதீங்க. பிரச்சனை எந்த ரூபத்துல வரும்னே எதிர்பார்க்க முடியாது. குறிப்பா சொகுசு ஹோட்டல்கள், ரிசார்ட்கள், போன்ற இடங்களில் தங்கும் போது தங்கும் அறைகள், குளியல் அறைகளில் ரகசிய கேமிராக்கள் உள்ளனவா? ரூம் சரியாக லாக் செய்யப்பட்டுள்ளதா என்பதில் ரொம்பவே கவனமாக இருங்க. ஏனெனில் நடந்த சம்பவம் அப்படி.

சென்னை கூவத்தூரில் நடிகை காதல் சந்தியாவுக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த பண்ணை வீட்டை சந்தியாவின் கணவர் வெங்கடேஷன் சொகுசு ஹோட்டலாக பராமரித்து, நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த பண்ணை வீட்டில் காதலனுடன் வந்து தங்கிய இளம்பெண்ணிடம் நள்ளிரவில், அங்கே வேலைப் பார்த்து வந்த ஊழியர், திருட்டுத்தனமாக இன்னொரு சாவி போட்டு, படுக்கையறைக்குள் நுழைந்து அருகில் காதலன் படுத்திருந்த போதே அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடற்கரையோரத்தில் ரம்மியமாக, விசாலமான நீச்சல் குளம், சுற்றிலும் புல் தரை என ஏகாந்தமாக விடுமுறையை அனுபவிக்க நினைப்பவர்களின் முதல் ஜாய்ஸாக காதலர்கள் முதல்  ஐடி ஊழியர்கள் வரை அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்கு கொண்டாட்டமான இடமாக இந்த பண்ணை வீடு இருந்து வருகிறது. 

பண்ணைவீடு

இந்த பண்ணை வீட்டில் சனி, ஞாயிறுகள் தொடங்கி ரிலாக்ஸ் செய்பவர்கள், குடும்பத்துடன் ஓய்வாக பொழுதை கழிக்க விரும்புபவர்க என பலரும் அடிக்கடி வந்து தங்கி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.  சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பலர் வந்து இந்த பண்ணை வீட்டில் வீக் எண்டை Vibe செய்வது வழக்கம் அந்த வகையில்  சென்னையை சேர்ந்த 25 வயது  இளைஞர், தனது காதலி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து, இந்த பண்ணை வீட்டில் 3 அறைகள் எடுத்து தங்கியுள்ளார்.

அங்கு, தனது காதலியுடன் இளைஞர் தனியாக அறை எடுத்த நிலையில், அந்த அறையை பராமரிக்கும் பொறுப்பு, சென்னை சீக்கினாங்குப்பத்தில் வசித்து வரும்  சுபாஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் அங்கே ரூம்பாயாக இருந்து வருகிறார். பகலில் காதலி மற்றும் நண்பர்களுடன் Vibe செய்து டையர்டாக இருந்த இளைஞர் ஒருவர்  இரவில் தனது காதலியுடன் அறையில் தூங்கியுள்ளார்.. இவர் தங்கியிருந்த அறை உள்பக்கம் தாழிட்டு கொண்டனர். இருந்தாலும், வெளிப்பக்கம் மூலம் எளிதாக திறக்கும் தாழ்ப்பாளை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்திருந்த ரூம் பாய் சுபாஷ், இரவு டையர்டாக தூங்கி கொண்டிருந்த காதலர்களின் அறைக்குள் நைசாக நுழைந்தார்.  காதலர்களுக்கு நடுவில் படுத்து அருகில் படுத்திருந்த பெண்ணிடம் அவரது காதலனாக தன்னை காட்டிக் கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

பண்ணைவீடு

வித்தியாசமான உணர்வுகள் நிகழ்ந்ததால் உடனே எழுந்து அறையின் லைட்டை ஆன் செய்தார் காதலி. அருகில் காதலன் நன்கு தூங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து விட்டார்.  உடனே, பெண் கூச்சலிட்டதை கேட்டு அவரது காதலன் உட்பட அனைவரும் எழுந்தனர். அப்பெண் நடந்ததை கூற காதலன், நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அறை முழுவதும் தேடியதில் கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த ரூம் பாயை பிடித்து அவரை நையப் புடைத்து காவல் துறையில் ஒப்படைத்தனர்.  

இளைஞர்கள் மற்றும் அவரது நண்பர்கள் தொடுத்த தாக்குதலால் காயமடைந்த சுபாஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், விசாரணைக்காக சுபாஷின் செல்போனை கைப்பற்றிய போலீசார், அதில், இதுவரை பண்ணை வீட்டில் தங்கிச் சென்ற பல பெண்களின் ஆபாச வீடியோக்கள், குளியலறை வீடியோக்களைக் கண்டு அதிர்ந்தனர்.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சுபாஷிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  

அடுத்தகட்ட விசாரணையில் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்பட்டு ஏகப்பட்ட உண்மைகள் வெளிவரக்கூடும் என காவல் துறையினர் முதல் கட்ட தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web