நடிகை ஷாலினி திடீர் மருத்துவமனையில் அனுமதி... அஜர்பைஜானில் இருந்து பறந்து வந்த அஜீத்!

 
ஷாலினி

 தமிழ் திரையுலகில் தல ஆக கொண்டாடப்படும் நடிகர் அஜித்குமார்  மனைவி நடிகை ஷாலினி. இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றிருந்த நிலையில், நேற்று நடிகர் அஜித்குமார் சென்னைக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.


இதனையடுத்து, இன்று அஜித் மருத்துவமனைக்கு சென்று தன் மனைவியை நேரில் பார்த்து கவனித்து வந்தார். இங்கு வந்த பிறகு நடிகர் அஜித் மனைவியுடன் மருத்துவமனையில் தங்கியிருந்தார். இதற்கான புகைப்படங்கள்  வைரலாகி வருகிறது.  அஜீத் குமார் படப்பிடிப்பில் இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர் சென்னை வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அஜித் மீது எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த நிலையில், ஷாலினி தனது கணவர் அஜித் தன்னை கவனித்துக்கொள்வது போல ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.  “என்றும் உன்னை காதலிப்பேன்” என கேப்ஷனும் கொடுத்துள்ளார்.   இதன் மூலம் அஜித் வரவில்லை என்பதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்ததற்கும்  முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது.

அஜீத் ஷாலினி


மனைவி ஷாலினியை பார்க்க சென்னை வந்த அஜித்  மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்று விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு  இதுவரை 80 % முடிந்திருக்கும் நிலையில், இந்த படத்திற்கு பிறகு  அஜித்குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் .  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web