கோலாகலமாக நடந்த திருமணம்... காதலரை கரம் பிடித்தார் நடிகை சோனாக்‌ஷி!

 
சோனாக்‌ஷி

 பிரபல இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகளும், நடிகையுமான சோனாக்‌ஷி சின்ஹா இன்று தனது காதலரை கரம் பிடித்தார். இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 

சோனாக்‌ஷி

தமிழில், ரஜினியுடன் 'லிங்கா' படத்தில் நடித்திருந்தார் சோனாக்‌ஷி. தற்போது, இவர் நடிப்பில் 'ஹீராமண்டி: தி டைமண்ட் பஜார்' வெப் சீரிஸ் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இவரும் இந்தி நடிகர் ஜஹிர் இக்பாலும் காதலித்து வந்தனர்.

சோனாக்‌ஷி
இந்நிலையில் இவர்கள் திருமணம் ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இந்து, இஸ்லாமிய திருமண சடங்குகள் ஏதுமில்லாமல் சிறப்பு திருமண சட்டத்தின் மூலம் பதிவு திருமணம் செய்து கொண்டனர். மாலையில் நடந்த திருமண வரவேற்பில், இந்தி திரையுலகினர், பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!