நடிகை சுனைனாவுக்கு விரைவில் டும் டும்.. விவாகரத்தான யூடியூபரை மணப்பதாக தகவல்!

 
சுனைனா

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும்  ஹிட் ஆனதோடு, படமும் நல்ல வெற்றியைப் பெற்றது.  அவர் தொடர்ந்து இரண்டு படங்களில் நகுலுடன் நடித்தார் மற்றும் நகுலுடன் காதல் வதந்திகள் வந்தன. ஆனால் நகுல் உடனடியாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அது வெறும் வதந்தியாக மாறியது. பின்னர் யாதுமாகி, வம்சம், திருத்தணி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார் சுனைனா.

இவரது வேகத்தால் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக வருவார் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோசமான படங்களில் நடித்து சிறிது காலத்திலேயே தனது மார்க்கெட்டை இழந்தார். ஆனால், தற்போது வரை சினிமாவில் தொடர்ந்து இருந்து வருகிறார். பல படங்கள் தோல்வியடைந்தாலும் சில படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. குறிப்பாக சீனு ராமசாமியின் நீர்பறவை படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் சில்லு கருப்பட்டி படத்திலும் அற்புதமாக நடித்துள்ளார். படத்தைப் பார்த்தவர்கள் சுனைனாவின் நடிப்பை மட்டும் பாராட்டினர்.

தற்போது சுனைனா படங்கள் மட்டுமின்றி வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அமேசான் பிரைமில் இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப் சீரிஸில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார்.35 வயதான சுனைனா கல்யாணம் ஆகமால் தனிமையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில், சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த நபரின் பெயரைக் குறிப்பிடாமல் தனக்கு நிச்சயம் நடந்ததாக அறிவித்திருந்தார். இதையடுத்து சுனைனா யாருடன் டேட்டிங் செய்கிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சுனைநாதனின் வருங்கால கணவர் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது. சுனைனா துபாயில் பிரபல யூடியூபரான காலித் அல் அமெரியை திருமணம் செய்ய உள்ளார். துபாயில் விலாக் செய்து ஏராளமான ரசிகர்களை கொண்ட இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனைவியை விவாகரத்து செய்தார். அதுவரை தனது மனைவியுடன் ஜாலியாக வ்லாக் செய்து ரசிகர்களை கவர்ந்த அவர், தற்போது மனைவியை விவாகரத்து செய்து ஆறு மாதங்களுக்கு பிறகு சுனைனாவை இரண்டாவது திருமணம் செய்ய விரும்புகிறார். அவர் மிகவும் செல்வாக்கு மிக்க யூடியூபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!