நடிகை தமன்னா காதலருடன் திருமணம்?!

 
தமன்னா காதலருடன்

தமிழ் சினிமாவில் முண்ணனி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை தமன்னா.  நயன்தாரா - த்ரிஷாவுக்கு அடுத்தபடியாக  18 வருடங்களுக்கு மேலாக, ஹீரோயினாக  நடித்து வருபவர்  நடிகை தமன்னா. இவர்   2005ல் வெளியான   'கேடி'  படத்தின் மூலம்  அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடித்த கல்லூரி திரைப்படம் ரசிகர்களிடையே   நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக நடிகர் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்த 'படிக்காதவன்' திரைப்படம் இவரின்   கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.  இதன் பிறகு முண்ணனி நடிகர்களான   விஜய், அஜித், சூர்யா,  உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் தமன்னா.

தமன்னா காதலருடன்

அதே போல் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஃபேமஸ் ஆனார்.    'பாகுபலி' திரைப்படத்திற்கு பிறகு   கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்தார். தற்போது திரைப்படங்களுடன்  வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வரும் தமன்னா, லஸ்ட் ஸ்டோரி 2 வெப் தொடரில் நடித்த போது, நடிகர் விஜய் வர்மாவை காதலிக்க தொடங்கினார். இருவரும்   டேட்டிங் செய்து வந்த நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறலாம் என கூறப்பட்டு வரும் நிலையில்  இது குறித்து நடிகை தமன்னா  "நான் நடிக்க வந்த புதிதில், பத்து வருடங்கள் சினிமாவில் நடித்தால் போதும் என்ற மனநிலையுடன் தான் இருந்தேன்.

தமன்னா

எப்படியும் 30 வயதில் எனக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும் என நினைத்தேன். ஆனால் தற்போது 30 வயதை தாண்டியும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறேன். திருமணம் செய்ய சில பொறுப்புகள் தேவை. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். எனவே நான் எப்போது திருமணத்திற்கு தயாராக இருக்கின்றேன் என உணர்கிறேனோ அப்போது கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என கூறி இருந்தார். அதன்படி தற்போது தமன்னாவுக்கு திருமணம் செய்து கொள்ளும் மனநிலை வந்து விட்டதாகக்கூறியுள்ளார். முன்பே அவர் கூறியபடி  திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகி, குழந்தை, குடும்பம் என செட்டில் ஆவார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web