அதானி குழுமம் விதிகளை மீறவில்லை... உச்ச நீதிமன்றம் அமைத்த கமிட்டி பரபரப்பு அறிக்கை!

 
முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளினார் கவுதம் அதானி…!!

அமெரிக்காவின் ஷார்ட் செல்லர்ஸ்ஸின் துணை நிறுவனமாகக் கருதப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்திருந்தது அதில்  தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களுக்கு அதானி நிறுவனம் பதில் அளித்திருந்தாலும் திருப்தியடையாத எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தையே முடக்கியதோடு அதானி அம்பானிக்கு பிரதமர் மோடி கைக்கூலியாக செயல்படுகிறார் என்றனர். இதனால் அதானி நிறுவன பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன உலக பணக்காரர் வரிசையில் இருந்து பின்னுக்குத்தள்ளப்பட்டார் கெளதம் அதானி. 

அதானி

இதன் காரணமாக அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்திய அரசியலில் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் குழுவை அமைத்தது. இந்த குழு ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடி வேலை செய்தற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளது. அதானி நிறுவனம் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

எண்ணெய்

ஆனால் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி ஆறுமாத கால அவகாசம் கோரியது ஆனால் நீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது இதனால் நேற்று பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகள் மீண்டும் உயர ஆரம்பித்தன, பத்து பங்குகளைக் கொண்ட அதானி குழுமத்தின் பங்குகள் ஒரு சதவிகிதம் முதல் ஏழு சதவிகிதம் வரை ஏற்றம் கண்டன. செபியின் அறிக்கை என்ன என்பதைப்பொறுத்து அதானி குழும பங்குகளில் ஆட்டம் மீண்டும் விறுவிறுப்படையும் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web