அள்ளிக் கொட்டுது அதானி ஷேர்கள்... எல்ஐசி சந்தை மதிப்பு ரூ.44,670 கோடிக்கு எகிறியது!

எல்.ஐ.சி . நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!!

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான, அதானி குழுமத்தின் முன்னணி நிறுவன முதலீட்டாளருமான அதானி பங்குகளில் அதன் பங்குகளின் சந்தை மதிப்பு ஏப்ரல் மாதத்தில் இருந்து சுமார் ரூ.5,500 கோடி அதிகரித்துள்ளதாக பங்குச்சந்தை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வாரம் அதானி பங்குகளின் விலைகள் உயர்ந்ததால், அதானி குழுமத்தின் ஏழு நிறுவனங்களில் இந்திய அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) செய்த முதலீட்டின் சந்தை மதிப்பு ரூபாய் 44,670 கோடியாக உயர்ந்துள்ளது.

எல்ஐசி நிறுவனம் மிகப் பெரிய அளவில் அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் லிமிடெட் பங்குகளை வைத்திருக்கிறது. இது 9.12 சதவிகித பங்குகளைக் கொண்டுள்ளது. பிஎஸ்இயில் வியாழக்கிழமையான நேற்று இறுதி விலையாக   725 ஆக இருந்தது அந்த பங்கு மதிப்பு மட்டுமே சுமார் 14,145 கோடியாகும்.

குழுமத்தின் முதன்மையான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் 4.25 சதவிகித பங்குகள், ரூபாய் 12,017 கோடியாக உள்ளது.  எரிவாயு விநியோக நிறுவனமான அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் மற்றும் அம்புஜா சிமென்ட் ஆகியவற்றில் சுமார்  ரூபாய் 10,500 கோடி மதிப்புள்ள பங்குகளை எல்ஐசி வைத்திருக்கிறது. எல்ஐசி பங்குகளை வைத்திருக்கும் மற்ற அதானி குழும நிறுவனங்கள் அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் ஏசிசி ஆகியவையாகும்.

கோடீஸ்வரர் கௌதம் அதானி தலைமையிலான குழு மீண்டும் வருவதற்கான உத்தியை வகுத்ததில் இருந்து, அதானி பங்குகள் மீட்சிப் பாதையில் உள்ளன. பங்கு முதலீட்டாளர் மற்றும் இரண்டு குழு நிறுவனங்களால் ரூபாய் 21,000 கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதி மன்றம் நியமித்த நிபுணர் குழு, அதானி குழும நிறுவனங்களில் பங்கு விலையில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறியதையடுத்து பங்குகள் உயர்ந்து கொண்டே உள்ளன, அதே நேரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து பணப்புழக்கத்தில் நடந்ததாகக் கூறப்படும் மீறல் குறித்து செபியின்  விசாரணை  தனியாக நடைபெற்று வருகிறது.

அதானி

ஜனவரி 30 அன்று, அனைத்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மொத்த கொள்முதல் மதிப்பு ரூபாய் 30,127 கோடி என்றும், ஜனவரி 27, 2023 அன்று சந்தை மதிப்பு ரூபாய் 56,142 கோடி என்றும் எல்ஐசி தெரிவித்துள்ளது. இருப்பினும், அதானி குழுமத்தின் பங்கு விலைகள் சரிவுடன், எல்ஐசியின் முதலீட்டின் மதிப்பு எதிர்மறையாக மாறி பிப்ரவரி 23 நிலவரப்படி கிட்டத்தட்ட ரூபாய் 27,000 கோடியாக இருந்தது.

அதானி குழுமப் பங்குகள் சமீபத்திய ஓட்டத்தில் பெரும்பாலான இழப்புகளை மீட்டெடுத்திருக்கிறது எல்ஐசி. மார்ச் 31, 2023 நிலவரப்படி, அதானி போர்ட்ஸ் & SEZல் எல்ஐசி 9.12 சதவிகித பங்குகளை வைத்துள்ளது, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 4.26 சதவிகித பங்குகள்; ஏசிசியில் 6.41 சதவிகிதம்; அம்புஜா சிமெண்ட்ஸில் 6.3 சதவிகிதம், அதானி டோட்டல் கேசில்  6.02 சதவிகிதம், அதானி டிரான்ஸ்மிஷனில் 3.68 சதவிகிதம், அதானி கிரீன் எனர்ஜியில் 1.36 சதவிகித பங்குகளும் உள்ளன.

அள்ளிக்கொட்டுது அதானி குழும பங்குகள் ! எல்ஐசி  சந்தை மதிப்பு ரூபாய் 44,670 கோடியை எட்டியது !!

நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான, அதானி குழுமத்தின் முன்னணி நிறுவன முதலீட்டாளருமான அதானி பங்குகளில் அதன் பங்குகளின் சந்தை மதிப்பு ஏப்ரல் மாதத்தில் இருந்து சுமார் ரூபாய் 5,500 கோடி அதிகரித்துள்ளதாக பங்குச்சந்தை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வாரம் அதானி பங்குகளின் விலைகள் உயர்ந்ததால், அதானி குழுமத்தின் ஏழு நிறுவனங்களில் இந்திய அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) செய்த முதலீட்டின் சந்தை மதிப்பு ரூபாய் 44,670 கோடியாக உயர்ந்துள்ளது.

எல்ஐசியின் மிகப்பெரிய அளவில் அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் லிமிடெட் பங்குகளை வைத்திருக்கிறது. இது 9.12 சதவிகித பங்குகளைக் கொண்டுள்ளது. பிஎஸ்இயில் வியாழக்கிழமையான நேற்று இறுதி விலையாக   725 ஆக இருந்தது அந்த பங்கு மதிப்பு மட்டுமே சுமார் 14,145 கோடியாகும்.

குழுமத்தின் முதன்மையான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் 4.25 சதவிகித பங்குகள், ரூபாய் 12,017 கோடியாக உள்ளது.  எரிவாயு விநியோக நிறுவனமான அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் மற்றும் அம்புஜா சிமென்ட் ஆகியவற்றில் சுமார்  ரூபாய் 10,500 கோடி மதிப்புள்ள பங்குகளை எல்ஐசி வைத்திருக்கிறது. எல்ஐசி பங்குகளை வைத்திருக்கும் மற்ற அதானி குழும நிறுவனங்கள் அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் ஏசிசி ஆகியவையாகும்.

அதானி

கோடீஸ்வரர் கௌதம் அதானி தலைமையிலான குழு மீண்டும் வருவதற்கான உத்தியை வகுத்ததில் இருந்து, அதானி பங்குகள் மீட்சிப் பாதையில் உள்ளன. பங்கு முதலீட்டாளர் மற்றும் இரண்டு குழு நிறுவனங்களால் ரூபாய் 21,000 கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதி மன்றம் நியமித்த நிபுணர் குழு, அதானி குழும நிறுவனங்களில் பங்கு விலையில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறியதையடுத்து பங்குகள் உயர்ந்து கொண்டே உள்ளன, அதே நேரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து பணப்புழக்கத்தில் நடந்ததாகக் கூறப்படும் மீறல் குறித்து செபியின்  விசாரணை  தனியாக நடைபெற்று வருகிறது.

ஜனவரி 30 அன்று, அனைத்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மொத்த கொள்முதல் மதிப்பு ரூபாய் 30,127 கோடி என்றும், ஜனவரி 27, 2023 அன்று சந்தை மதிப்பு ரூபாய் 56,142 கோடி என்றும் எல்ஐசி தெரிவித்துள்ளது. இருப்பினும், அதானி குழுமத்தின் பங்கு விலைகள் சரிவுடன், எல்ஐசியின் முதலீட்டின் மதிப்பு எதிர்மறையாக மாறி பிப்ரவரி 23 நிலவரப்படி கிட்டத்தட்ட ரூபாய் 27,000 கோடியாக இருந்தது.

அதானி குழுமப் பங்குகள் சமீபத்திய ஓட்டத்தில் பெரும்பாலான இழப்புகளை மீட்டெடுத்திருக்கிறது எல்ஐசி. மார்ச் 31, 2023 நிலவரப்படி, அதானி போர்ட்ஸ் & SEZல் எல்ஐசி 9.12 சதவிகித பங்குகளை வைத்துள்ளது, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 4.26 சதவிகித பங்குகள்; ஏசிசியில் 6.41 சதவிகிதம்; அம்புஜா சிமெண்ட்ஸில் 6.3 சதவிகிதம், அதானி டோட்டல் கேசில்  6.02 சதவிகிதம், அதானி டிரான்ஸ்மிஷனில் 3.68 சதவிகிதம், அதானி கிரீன் எனர்ஜியில் 1.36 சதவிகித பங்குகளும் உள்ளன. இந்நிலையில் ஜூலை 21, 2023 வணிக நேரத்திற்குப்பிறகு யார் யாரிடம் எல்.ஐ.சி பங்குகள் இருக்கிறதோ அவர்களுக்கு  ரூபாய் 3ஐ ஈவுத்தொகையாக அறிவித்திருக்கிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web