நாளை தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்!

 
சொத்து பத்திரம்

 தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக முகூர்த்த நாட்கள்,  விசேஷ நாட்களில் மக்களின் வசதிக்காக பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நாளை ஜூலை மாதம் 12ம் தேதி வெள்ளிக்கிழமை ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த தினம். இதனையடுத்து  பதிவுத்துறை அலுவலகங்களில் ஜூலை 12 நாளை கூடுதல் டோக்கன்களை விநியோகிக்க தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பத்திரப்பதிவு

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்  “ஒரே ஒரு  சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 50 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களும் கூடுதலாக வழங்கப்படும் என  பதிவுத்துறை  தெரிவித்துள்ளது. கூடுதல் டோக்கன்கள் வழங்க வேண்டும் என மக்களிடமிருந்து வந்த கோரிக்கை அடிப்படையில் கூடுதல் டோக்கன்கள் நாளை விநியோகம் செய்யப்படுவதாக பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web