அடி தூள்... ரொம்ப வருஷத்துக்கு பின் இந்திய விமான நிலைய ஆணையம் லாப பாதைக்கு திரும்பியது!

 
விமான நிலையம்

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மீண்டும் சுறுசுறுப்பு அடைந்துள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூபாய் 3,400 கோடி லாபம் ஈட்டியுள்ளது, உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகரித்து அதன் நிதி செயல்திறனை அதிகரித்தது என்று ஒரு செய்தியில் தெரிவித்துள்ளது.

விமானப்போக்குவரத்து மற்றும் ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்துத் துறையையும் கணிசமாக பாதித்த கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு AAI முதல் முறையாக லாபத்தைப் பதிவு செய்துள்ளது. நிதியாண்டுகளில் 2020-21 மற்றும் 2021-22  AAI நஷ்டம் அடைந்ததாக அறிவித்தது.

மார்ச் 2022ல் முடிவடைந்த நிதியாண்டில் இழப்பு ரூபாய் 803.72 கோடியாக இருந்தது, இது மார்ச் 2021ல் முடிவடைந்த நிதியாண்டில் இது ரூபாய்  3,176.12 கோடியாக இருந்ததாக தெரிவித்திருந்தது.

ஏர் இந்தியா விமானம் விமான நிலையம்

தற்பொழுது 2022-23 நிதியாண்டில் ரூபாய் 3,400 கோடி லாபத்தைப் பதிவு செய்துள்ளதாக PTI இடம் தெரிவித்துள்ளது. இது ஒரு தற்காலிக புள்ளிவிவரம் மற்றும் நிதி முடிவுகளின் தணிக்கைக்குப்பிறகு இறுதி எண்ணிக்கை தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானப்போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள உயர் வளர்ச்சியே இந்த நல்ல செயல்திறனுக்கு முக்கியக் காரணம் என்றும் அந்த விமானத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

2022ம் ஆண்டில், உள்நாட்டு விமானப்பயணிகள் போக்குவரத்து 47.05 சதவிகிதம் அதிகரித்து 12.32 கோடியாக இருந்தது எனாவும், இது அதற்கு முந்தைய ஆண்டில் 8.38 கோடியாக இருந்ததாவும் தெரித்துள்ளது.

விமான நிலையம்

மேலும், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கை 51.70 சதவிகிதம் அதிகரித்து 3.75 கோடியாக உயர்ந்துள்ளது. 2021-22ல், AAI ஆனது விதிவிலக்கான பொருட்கள் மற்றும் வரி உட்பட ரூபாய்  8.76 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. இதற்கிடையில், மார்ச் 2022ல் முடிவடைந்த நிதியாண்டில், கட்டாய ஈவுத்தொகை செலுத்த வேண்டிய தேவையை அரசாங்கம் தள்ளுபடி செய்ததும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. ஜனவரி 2022ல் டாடா குழுமத்திற்கு அரசாங்கத்தால் நஷ்டமடைந்த நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு முன்பு ஏர் இந்தியா இதனை தள்ளுபடி செய்வதற்குப் திலாக AAI தள்ளுபடி கோரியது.

24 சர்வதேச மற்றும் 80 உள்நாட்டு விமான நிலையங்கள் உட்பட 137 விமான நிலையங்களை AAI நிர்வகிக்கிறது. இது முழு இந்திய வான்வெளி மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதிகளிலும் விமான போக்குவரத்து மேலாண்மை சேவைகளை (ATMS) வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web