அடி தூள்.. தங்கம் கிராமுக்கு ரூ.83 குறைவு... நகைப் ப்ரியர்கள் உற்சாகம்!

 
மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

இன்றைய காலை நேர விலை நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை திடீர் சரிவை சந்தித்துள்ளது நகைப் ப்ரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 83 உறைந்துள்ளதால், காலையிலேயே அக்னி வெய்யிலையும் பொருட்படுத்தாமல், திருமணத்திற்காக நகைகளை வாங்க காத்திருந்தவர்கள் நகைக் கடைகளில் குவிய துவங்கினார்கள். ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.664 குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  

இன்று கிராமுக்கு ரூ.83 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5.692க்கும், சவரனுக்கு ரூ664 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 45536க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு  ரூ1.30காசுகள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ82.40க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ82400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தங்கத்தின்  விலை மேலும் குறைய வாய்ப்பு! நிபுணர்கள் விளக்கம்!

சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தினை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் தங்கத்திற்கான மவுசே தனிதான். இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மீதான முதலீடு பெரும் சேமிப்பாக இருந்து  வருகிறது நடுத்தர மக்களின் மிகப்பெரிய சேமிப்பு பெட்டகமே  தங்கம் தான். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான சேமிப்பு இல்லத்தரசிகள் ,முதலீட்டாளர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது அவசர, அவசிய கால கட்டத்தில் தங்க நகைகள் தான் உடனடி பணமாக முடியும் என்பதே இதற்கு காரணம். 

அடி தூள்!! தங்கம் விலை அதிரடி குறைவு!! காலையிலேயே குவிந்த இல்லத்தரசிகள்!!

தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு.அமெரிக்க  பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய பங்கு சந்தைகளிலும் அதன் எதிரொலியாய் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பலரும் பாதுகாப்பு கருதி தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பியிருப்பதால், இப்போதைக்கு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் நிகழாது எனவும், தங்கத்தின் விலை பெரிய அளவில்  குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த விலைகளை பார்க்கும் போது  மக்களுக்கு தங்கத்தின் மீது ஒரு பயம் வருகிறது.  அதனால், மக்கள் தங்கம் வாங்குவதற்கு யோசனை செய்து வருகின்றனர்.ஆனால் முதலீட்டாளர்களை பொறுத்தவரை இது  ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு பெரும்  அதிர்ச்சியாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை குறையுமா என எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web