நாளை காலை வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்தி வைப்பு!
இன்று காலை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தினர்.

அதனையடுத்து கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள், குவைத் தீவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
