அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர செப். 30 வரை தேதி நீட்டிப்பு!

 
கல்லூரி மாணவிகள்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர செப்டம்பர் 30ம் தேதி வரை தேதி நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இளநிலை, முதுநிலை முதலாமாண்டு மாணவ - மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், விண்ணப்பப் பதிவினை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க  உரிய வழிவகைகள் செய்யப்பட்டு மேற்கண்ட பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். 

மாணவிகள்
ஆன்லைனில்  விண்ணப்பப்பதிவு மேற்கொள்ள தவறவிட்ட மாணவர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்  விண்ணப்பப்பதிவு இணையதளம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணாக்கர்கள் தாங்கள் சேர விரும்பும் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் செப்டம்பர் 30க்குள் விண்ணப்பித்து பயனடைலாம் எனக்  கூறியுள்ளார்.

கல்லூரி
இது குறித்து  கோவி. செழியன் நிருபர்களிடம் கூறுகையில்,‘ உயர் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை பரிசீலனையில் உள்ளது. விரைவில் வெளியிடப்படும். மாணவர்கள் நலன் பாதிக்க கூடாது என்பதற்காக தான் பார்த்து பார்த்து செய்யக்கூடிய பொறுப்பு உயர்கல்விக்கு உண்டு. எனவே எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற நிலை இல்லாமல் உயர்கல்வித்துறையின் மாண்பை கட்டிக் காக்கின்ற பொறுப்பை முதலமைச்சர் எங்களுக்கு வலியுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில்  உரிய நேரத்தில் உரிய முடிவெடுத்து மாணவர்கள் மாணவர்கள் நலன் காக்கப்படும். கால வரையறை இறுதி செய்ய முடியாது முதல்வரிடம் கலந்து பேசித் தெரிவிக்கப்படும்,’ எனக் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?