12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பு சேர்க்கை ? இபிஎஸ் விளாசல்!

 
இபிஎஸ்

 நடப்பாண்டு நடத்தப்பட்ட  நீட் தேர்வுகளில் தேர்வு மையங்களில் ஏற்பட்ட காலதாமத்திற்காக  கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதுகுறித்து நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமையின் விளக்கம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. அதே நேரத்தில்  வடமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல் வினாத்தாள் வழங்குதல் வரை பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.  ஜூன் 14ம் தேதி  நீட் தேர்வு முடிவுகள்  வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவசர அவசரமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் வெளியானது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து  வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே நீட் தேர்வு குறித்த பல்வேறு காரணங்களாலும், இதுபோன்ற நடைமுறை குளறுபடிகளும் ,அஇஅதிமுக தொடர்ச்சியாக கொண்டுள்ள நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதிபடுத்துகிறது .

நீட் நுழைவுத்  தேர்வு


அதன்படி நடப்பாண்டில்  நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும்.  மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்து பழையபடி 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என  புதிதாக அமையவுள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web