தீபாவளி ஸ்பெஷல்.. கம கம அதிரசம் ... வீட்டிலேயே...!!
தீபாவளிக்கு பல வீடுகளில் நோன்பு எடுப்பது உண்டு. அதில் மிக முக்கியமாக வைக்கப்பட வேண்டியது அதிரசம். பாட்டிகள் எல்லாம் அண்டாக்கள், பானைகள் நிறைய அதிரசங்களை சுட்டு அடுக்கினர். இன்றைய காலகட்டத்தில் நோன்பில் வைக்கப்படும் சிறிய அளவிலான எண்ணிக்கையே சுடமுடியவில்லை.
காரணம் அதிரசம் என்றதும் மிகவும் கஷ்டமான வேலை . பாகு சரியாக செய்யவில்லை என்றால் அதிரசமே வராது என்ற பல சந்தேகங்கள் கேள்விகள். பொருட்களை சரியான விகிதத்தில் பயன்படுத்தினால், அதிரசம் செய்வது மிகமிக சுலபம்.
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
ஏலக்காய்தூள் – 1சிட்டிகை
நல்லெண்ணெய் – சிறிதளவு
ஒரே கப்பை வைத்து அளக்க வேண்டியது அவசியம்.
செய்முறை
ஒரு கப் பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியினை 10 நிமிடம் காய வைக்கவும். அரிசி சற்று ஈரப்பதமாக இருக்க வேண்டியது அவசியம். இப்போது இந்த அரிசியினை மிக்சியில் போட்டு அரைத்து சலித்துக் கொள்ளவும்.
3/4 கப் வெல்லத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி வெல்ல பாகு தயாரிக்க வேண்டும். அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் ஏலக்காய் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.வெல்லப்பாகு சூடாக இருக்கும் போதே பச்சரிசி மாவில் ஊற்றி கிளற வேண்டும்.
மாவு மீது சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி ஆறவிட்டு 2 அல்லது 3 நாட்கள் மூடி வைக்க வேண்டும். இப்போது அதிரசமாவு சரியான பதத்தில் தயாராக இருக்கும். இந்த மாவினை வட்டமாக தட்டி மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொரித்து எடுக்க சுவையும் , மணமும் வீட்டையே நிறைக்கும்
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!