வழிந்தோடிய வெள்ளத்தில் துணிச்சல் பயணம்.. கர்ப்பிணி மனைவியை காப்பாற்ற போராடிய கணவன்!

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயநாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாலம் வெள்ளத்தில் மூழ்கியதில் கார் டிரைவர் ஒருவர் ஆபத்தான பயணம் மேற்கொண்டார்.
Brave husband crosses overflowing bridge in Maruti Alto to take pregnant wife to hospital in Idukki.#KeralaLandslides pic.twitter.com/KzDE2kqD3C
— 𝕂𝕂 (@Try2StopME) July 31, 2024
இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. பிரசவ வலியில் இருந்த தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக காரில் ஆபத்தான முறையில் பாலத்தை கடந்துள்ளார். நிரம்பி வழிந்த பாலத்தின் மீது துணிச்சலாக கடந்து சென்று மனைவியை மருத்துவமனையில் சேர்த்த அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!