அள்ள, அள்ள சடலங்கள்!! வரலாறு காணாத வெள்ளத்தால் 203 பேர் பலி!! பீதியில் பொதுமக்கள்!!

 
காங்கோ

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கலேஹே, நியாமுகுபி, கிவு உள்ளிட்ட பகுதிகள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சேதங்களை எதிர்கொண்டுள்ளன. மழை ஒருபக்கம் என்றால் நிலச்சரிவும் ஏற்பட்டும் மக்களை திண்டாட வைத்தது. 

ஒரு வார காலமாக கனமழை பெய்து வந்த நிலையில் அங்குள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியது. ஒரு கட்டத்தில் வெள்ளம் அதிகமாக ஆற்றின் இருபுறமும் இருந்த கரைகள் உடைய தொடங்கின. இதனால் வெள்ளம் கலேஹே நகருக்குள் நுழைந்தது. 

காங்கோ

அப்போது சாலைகள், வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள், சிறிய வீடுகள் என அனைத்தையும் அடித்துக்கொண்டு சென்றுவிட்டது. அதில் சிக்கியதில் தற்போது வரையில் சுமார் 203 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்டு படையினர் கூறியுள்ளனர். பலரை காணவில்லை என குடும்பத்தினர் கூறுவதால் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

வெள்ளம் அடித்துச்சென்ற பிறகு நகர்பகுதிக்கு வெளியேயுள்ள கிராமங்கள் அதிகளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. அதாவது அவர்களின் குடிசை வீடுகள் அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டதால், எது யாருடைய இடம் என அடையாளம் காணமுடியாத அளவுக்கு மக்கள் திணறி வருகின்றனர்.

இதனால் அவர்கள் அடுத்து என்னசெய்வது என்று தெரியாமல் கண்ணீர்விட்டு வருகின்றனர். அரசு தரப்பிலிருந்து தங்குமிடம் மற்றும் உணவு பொருட்களை விநியோகித்து வருகிறது. ஆனால் இது போதுமான அளிவில் இல்லை என மக்கள் கூறுகின்றனர். 

காங்கோ

கடந்த வாரம் தொடக்கத்தில் ருவாண்டாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 129 பேர் உயிரிழந்திருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு சோகம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ள பாதிப்புகளிலிருந்த மீள அண்டை நாடுகள் உதவுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web