29 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ந்து 3 நாட்கள் கனமழை... வெதர்மேன் தகவல்!
தமிழகம் முழுவதும் சென்னை, திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில் 29 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ந்து 3நாள்கள் கனமழை பெய்திருப்பதாக வெதர்மேன் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கடந்த 1996ம் ஆண்டு புயல் சின்னம் உருவாகி கனமழை பெய்தபோதுதான், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ச்சியாக 3 நாள்கள் கனமழை பெய்துள்ளது.
அதன்பிறகு தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்தடுத்து கனமழை பதிவாகியுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று மழைக்கான வாய்ப்பு குறைவுதான். ஆனால் மழை விருந்தில் வேறு சில மாவட்டங்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக பதிவிட்டுள்ளார்.

அத்துடன் தமிழகத்தில் எப்போதெல்லாம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறதோ, அப்போது, மாநிலத்தின் மற்ற இடங்களில் சலனமே இருக்காது. இப்போது, சென்னையுடன் ராணிப்பேட்டையும் சேர்ந்துள்ளது.
பதிவான மழை விவரங்கள் :
துரைப்பாக்கம் - 19.5 செ.மீ.
பள்ளிக்கரணை - 17.7 செ.மீ.
மேடவாக்கம் - 17 செ.மீ.
பாரிமுனை - 15.9 செ.மீ.
மடிப்பாக்கம் - 15.7 செ.மீ.
ஈஞ்சம்பாக்கம் - 14 செ.மீ.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சைதாப்பேட்டை, நீலாங்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூா், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணா நகா், செனாய் நகா், அமைந்தகரை, முகப்போ் உட்பட இடங்களில் அதிகபட்சமாக 120 மி.மீ. மழை பெய்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
