இத்தனை வருஷங்களா ஏமாந்தோமா... இனி ‘ஹெல்த் ட்ரிங்ஸ்’ கிடையாது... லேபிளை மாற்றியது ஹார்லிக்ஸ்!

 
ஹார்லிக்ஸ்

 நான் ஆரோக்கியமாக வளர்கிறேனே மம்மி என தொலைக்காட்சி விளம்பரங்களில் நூற்றுக்கணக்கான ஊட்டச்சத்து பானங்கள் காட்டப்படுகின்றன. இவைகளை ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ற பெயரில் பெட்டிக்கடைகள் தொடங்கி மால்கள் வரை விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இந்த வகையான ஊட்டச்சத்து பானங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முண்ணனியில் இருந்து வருவது ஹிந்துஸ்தான் யூனிலீவரின் ஹார்லிக்ஸ். இந்த டிரிங்க்  'ஹெல்த் ஃபுட் டிரிங்க்ஸ்' நிறுவனத்தால் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டு ஊட்டச்சத்து பானம் என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.  

ஹார்லிக்ஸ்

தற்போது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இ-காமர்ஸ் வலைத்தளங்களை அந்தந்த 'ஹீதி பானங்கள்' பிரிவில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது குறித்து ஹிந்துஸ்தான் யூனிலீவரின் தலைமை நிதி அதிகாரி ரித்தேஷ் திவாரி  "பிரிவின் லேபிள்களை FND என்று மாற்றியுள்ளோம், இது மிகவும் சிறந்த வழியாகும்."

 

இந்த வகை பானங்கள்  வளர்ச்சிக்கு ஒரு பெரிய வாய்ப்பை அளிக்கிறது . ஹிந்துஸ்தான் யூனிலீவர் வாடிக்கையாளர்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது, பயன்பாடு மற்றும் நுகர்வோர் FND பிரிவில் மேம்படுத்துவதற்கு அதிக நன்மைகளை வழங்கி வருகிறது. நீரிழிவு மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் அதன் பிரீமியம் வரம்பில் நிறுவனம் சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது.  

ஹார்லிக்ஸ்


முன்னதாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006ன் கீழ் 'சுகாதார பானங்கள்' என்பதற்கு எந்த வரையறையும் இல்லை என கூறியுள்ளது.  இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆரோக்கிய பானம், எனர்ஜி டிரிங்க் பிரிவுகளின் கீழ் கொண்டு வரவேண்டாம் . இந்த வகையான விளம்பரங்கள் தவறான பாதைக்கு இட்டு செல்வதாகவும், இனி   இந்த வகையான பானங்கள் செயல்பாட்டு ஊட்டச்சத்து பானங்கள் மட்டுமே எனவும் அறிவுறுத்தியுள்ளது

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web