தீபிகா படுகோனைத் தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப் அம்மாவாகிறார்... குவியும் வாழ்த்துக்கள்... வைரலாகும் வீடியோ!

 
தீபிகா படுகோனே
 

பிரபல இந்தி திரைப்பட நடிகை கத்ரீனா கைஃப், கர்ப்பமாக உள்ள செய்தி வெளியாகி இருக்கும் நிலையில், கத்ரீனாவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.இந்தி திரையுலகில் ஹிட் நடிகைகள் தற்போது குடும்ப உறவில் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். மும்பை மீடியாக்கள் பிரபல இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோனே  கர்ப்பமடைந்திருக்கும் செய்தியைக் கொண்டாடி வரும் நிலையில், தீபிகா தன்னுடைய ப்ரைவஸியை இழந்திருக்கிறார். தீபிகாவின் வயிறு சிறியதாக இருக்கிறது,

அவர் கர்ப்பமாக இல்லை... வாடகைத் தாயை அமர்த்தி இருக்கிறார் என்று அடுத்தடுத்து குறை சொல்பவர்களும் இருக்கின்றனர்.இந்நிலையில், இந்த மாதிரியான எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ளாமல் நடிகை கத்ரீனா கைஃப் - விக்கி கெளஷல் ஜோடி, லண்டனில் தங்கியிருந்து, தங்களது பிரசவத்தை திட்டமிடுகின்றனர். தங்களது குழந்தை லண்டனில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படும் இந்த ஜோடி மீடியா வெளிச்சத்தில் இருந்தும் தப்பித்துள்ளனர். 

தீபிகா படுகோனே
இந்நிலையில், லண்டன் தெருக்களில் விக்கியுடன் கைக்கோத்து  கர்ப்பிணியான நடிகை கத்ரீனா நடந்து செல்லும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கத்ரீனாவின் வயிற்றைப் பார்த்த நெட்டிசன்கள் ’கத்ரீனா, தீபிகாவை விட பல மாசம் முன்னாடி இருக்கிறார் போலயே? வயிறு பெரிதாக இருக்கிறது!’  என சொல்லி வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!