அக்னிபாத் திட்டம்.. மோடிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்த கூட்டணி கட்சிகள்!

 
மோடி

மத்திய பாஜக அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி. தியாகி அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பிரச்சாரத்தின் போது அக்னிபாத் திட்டத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பை உணர்ந்து, திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரியுள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தை தொடர்ந்து பா.ஜ.க கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான லோக் ஜனசக்தியும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மோடி

அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிராக் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார். தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் சிராக் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார். பிரதமராக பதவியேற்கும் முன் மோடிக்கு கூட்டணி கட்சிகள் பல நிபந்தனைகளை விதித்து வருவதால், பா.ஜ., கடும் அதிர்ச்சியில் உள்ளது.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அக்னிபாத் குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று ராகுல் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராணுவ பணியை தற்காலிக பணியாக மாற்றுவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web