பெங்களூருவில் பரபரப்பு... இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி!

கர்நாடக மாநில பாஜக தொடர்ந்திருந்த அவதூறு வழக்கில் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் காங்கிரஸ் எம்பி., ராகுல் காந்தி. இதற்காக அவர் இன்று காலை டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்டார். கடந்த 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் சார்பில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோரது படங்கள் இடம் பெற்றிருந்தன.
#WATCH | Congress leader Rahul Gandhi arrives in Bengaluru, Karnataka.
— ANI (@ANI) June 7, 2024
Rahul Gandhi will appear before a special court in Bengaluru in response to a summons issued by a court in a defamation case filed by BJP’s Karnataka unit. Karnataka CM Siddaramaiah and Deputy CM DK… pic.twitter.com/5KoT0UOY0K
இது பாஜக மீது அவதூறு பரப்பும் நோக்கில் வெளியிடப்பட்டிருப்பதாக கர்நாடக மாநில பாஜக குற்றம் சாட்டியதோடு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தேர்தல் காரணமாக கடந்த ஜூன் 1ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது ராகுல் காந்தி ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று நீதிமன்றத்தில், ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை டெல்லியில் இருந்து விமான மூலம் பெங்களூருக்கு ராகுல் காந்தி புறப்பட்டார். இன்று மதியம் நடைபெறும் வழக்கு விசாரணையின் போது அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!