’AI ரோபோக்கள் மனிதர்களைப் போல் செயல்படாது’.. சீன ராணுவம் அறிக்கை வெளியீடு!

 
 AI ரோபோ

AI தொழில்நுட்பத்துடன் கூடிய மனித உருவ ரோபோக்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் சீனா, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. போர்க்களத்தில் AI ரோபோக்கள் மனிதர்களைப் போல் செயல்பட முடியாது என சீன ராணுவம் தெரிவித்துள்ளது. சீன மிலிட்டரி டெய்லி வெளியிட்டுள்ள கட்டுரையில், AI தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அவற்றை மாற்றக்கூடாது என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.

போர்க்களத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மனிதர்களால் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்றும், AI ரோபோக்கள் கொடுக்கும் உத்தரவுப்படி மட்டுமே செயல்பட முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பத்தால் இயங்கும் ராணுவ உபகரணங்களை உருவாக்கும் பணியில் சீன ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இது AI தொழில்நுட்ப ஆய்வாளர்கள் முக்கியமானதாக கருதுகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web