அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி!
அதிமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நரம்பியல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த நத்தம் விஸ்வநாதன் கூட்டத்தில் இருந்து முன்கூட்டியே கிளம்பி சென்ற நிலையில் அவருக்கு நரம்பியல் பிரச்சனை காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
