அதிமுக நிர்வாகி படுகொலை.. தலைமறைவான பெண் கவுன்சிலரை பிடிக்க போலீசார் தீவிரம்!

 
 தனலட்சுமி

சேலம் தாதகாபட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது (42)). இவர் கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., செயலாளராக இருந்தார். கடந்த 3ம் தேதி இரவு இவரது வீட்டின் முன்பு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் சண்முகத்தை வெட்டிக் கொன்றது. இந்தக் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தடை செய்யப்பட்ட லாட்டரியை சதீஷ்குமார் விற்றது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக சண்முகம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த கொலையில் தி.மு.க. தாதகாபட்டியை சேர்ந்த கவுன்சிலர் தனலட்சுமி மற்றும் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், அஜித் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.  அவர்கள் 4 பேரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். இவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் மற்றொரு தனிப்படை போலீசாரும் ஊட்டிக்கு விரைந்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web