தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்; கள்ளக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு!

 
எடப்பாடி ஆர்ப்பாட்டம் அதிமுக

கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. கள்ளக்குறிச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள், திமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்து போராட்டத்தை அறிவித்துள்ளன.

எடப்பாடி ஆர்ப்பாட்டம் அதிமுக

கடந்த சனிக்கிழமை தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை, உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “கள்ளச்சாராய சம்பவத்துக்கு திமுக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும், இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தினார்.

எடப்பாடி ஆர்ப்பாட்டம் அதிமுக

மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் அதிமுக தொண்டர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!