சேலத்தில் பரபரப்பு... எடப்பாடி திறந்து வைத்த நீர்மோர் பந்தலில் பழங்களை சூறையாடிய அதிமுக தொண்டர்கள்!

 
அதிமுக
 

தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கும் நிலையில் அதிமுக சார்பில் பொதுமக்கள் கூடும் இடங்களில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சூரமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை திறந்து வைத்தார்.

பின்னர் நீர்மோர் பந்தலைத் திறந்து வைத்து விட்டு, அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்ற ஓரிரு நிமிடங்களில் அவரை வரவேற்பதற்காக வந்திருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு நீர் மோர் பந்தலில் குவித்து வைக்கப்பட்டிருந்த நுங்கு, இளநீர், அண்ணாச்சி, முலாம்பழம், தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் ஜூஸ் பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.

admk

இதனைப் பார்த்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் நீர் மோர் பந்தல் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டதா? அல்லது அதிமுக தொண்டர்களுக்காக திறக்கப்பட்டதா? என முணுமுணுத்தப்படி சென்றனர். நிகழ்ச்சியின் ஹைலைட்டாக எடப்பாடி பழனிசாமி கிளம்பி சென்றதும், பந்தலில் வைக்கப்பட்டிருந்த பழங்களையும், ஜூஸ் பாட்டில்கள் என அனைத்தையும் அப்போதே காலி செய்து விட்டு அதிமுக தொண்டர்கள் அங்கிருந்து கிளம்பியது தான்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web