பசிப்பிணி போக்கும் ஐப்பசி பௌர்ணமி வழிபாடு, பலன்கள்!!

 
பௌர்ணமி

இன்றைய நாளில், திருமணம் கை கூட வேண்டும் என்று காத்திருப்பவர்கள் இப்படி பூஜைகள் செய்தால், நிச்சயமாக மனம் போல மாங்கல்ய வரம் கிடைக்கும். பொதுவாக பெளர்ணமி தினங்களுக்கு அபரிமிதமான சக்தி உண்டு. ஒவ்வொரு மாத பெளர்ணமி தினத்துக்கும் ஒரு சிறப்பு உண்டு. இந்த நாளில் நிலா தன் முழு பிரகாசத்துடன் பரிணமிக்கிறது. இதனால் வானத்தில் எழும் நேர்மறை அதிர்வலைகள் பூமியையும்  தொடும்.  

பௌர்ணமியன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம். பௌர்ணமி தினத்தில் அம்பிகை வழிபாடு உகந்தது. இந்த நாளில் செய்யப்படும் பூஜையால் அம்பிகையின் பரிபூரணமான அருளைப் பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு.  பௌர்ணமி நாளில் வீட்டிலும், குலதெய்வ கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதால் கூடுதல் சிறப்பான  பலன்களைப் பெற முடியும்.

வீட்டிற்கு அருகில் இருக்கும் அம்பிகை ஆலயங்களில் நடைபெறும் அபிஷேகம், அன்னதானம், சிறப்பு பூஜைகள், விளக்கு பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள வேண்டும். வீடுகளில் அவரவர் குலதெய்வ வழிபாட்டிற்கு பிறகு குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு தெய்வ மந்திரங்களை 108 முறை சொல்லி அர்ச்சித்து வழிபாடு செய்யலாம். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறலாம். இதனால் ஆயுள் பலம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம்,  தனலாபம்  கல்வியில்  மேன்மை என நினைத்தவரம் கிடைக்கச் செய்வாள். 

துன்பங்களைத் துரத்தி அடிக்கும் சித்ரா பௌர்ணமி வழிபாடு !

அதே போல் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்ட வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டு வீடுகளில் சத்ய நாராயண பூஜைகளும் செய்வதுண்டு. இந்த பூஜை செய்வதால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். 16 பேறுகளும் நம்மை வந்தடையும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு . பூஜைகள் அவரவர் குடும்ப வழக்கப்படி செய்யலாம் என்ற போதிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை தரவல்லது. எல்லா பௌர்ணமி தினங்களுமே சிறப்பு வாய்ந்தவை என்ற போதிலும் நம் வினைகளுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப குறிப்பிட்ட தினத்தில் வழிபாடு செய்து வர வாழ்வில் மேன்மை அடையலாம்.

சித்ரா பௌர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் கிடைக்கும்.

வைகாசி பௌர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றினால் திருமணம் கைகூடும்.

ஆனி பௌர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

ஆடி பௌர்ணமியில் விளக்கேற்றினால் வளமும் நலமும் அதிகரிக்கும்

ஆவணி பௌர்ணமியில் விளக்கேற்றினால் செல்வம் பெருகும்.

பௌர்ணமி
புரட்டாசி பௌர்ணமியில் விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் நிறையும்.

ஐப்பசி பௌர்ணமியில் விளக்கேற்றினால் பசிப் பிணிகள் நீங்கும்.

கார்த்திகை பௌர்ணமியில் விளக்கேற்றினால் புகழ் ஓங்கும்.

மார்கழி பௌர்ணமியில் விளக்கேற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தை பௌர்ணமியில் விளக்கேற்றினால் நன்மைகள் அதிகரிக்கும்.

மாசி பௌர்ணமியில் விளக்கேற்றினால் துன்பங்கள் விலகும்.

பங்குனி பௌர்ணமியில் விளக்கேற்றினால் தர்மம் செய்த பலன் கிட்டும்.

பெளர்ணமியன்று  மறக்காமல் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்து வாங்க. இல்லங்களை தெய்வங்கள் குடிகொள்ளும் ஆலயமாக்குவோம். அனைத்து வளங்களும் கிடைக்கப் பெற்று வாழ்வில் வளம் பெறுவோம். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

From around the web