ஐப்பசி பவுர்ணமி கிரிவலம்... அன்னாபிஷேகம்... சந்திரகிரகணம்... தஞ்சையிலும், திருவண்ணாமலையிலும் குவிய துவங்கிய பக்தர்கள்!

 
கிரிவலம்

இன்று ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தை முன்னிட்டு விருதுநகர்  மாவட்டம் சதுரகிரியிலும், திருவண்ணாமலையிலும் கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் குவிய துவங்கியுள்ளனர். ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. இந்த அன்னாபிஷேகத்தைக் காண்பதற்காகவும் தஞ்சையிலும் பக்தர்கள் குழுமியுள்ளனர்.

ஒவ்வொரு மாத பெளர்ணமி தினத்தன்றும் கிரிவலம் செல்ல தமிழகம் முழுவதுமிருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து குவிகின்றனர். இந்நிலையில், ஐப்பசி  மாத பெளர்ணமி அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது என்பதால், இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வர துவங்கியுள்ளனர். 

திருவண்ணாமலை தீபம்

அதே போன்று, தஞ்சை பெரிய கோவிலிலும், அன்னாபிஷேக தரிசனத்திற்காக பக்தர்கள் குவிய துவங்கியுள்ளனர். இன்று சந்திரகிரணத்தை முன்னிட்டு அன்னாபிஷேக நேரம் தாமதமாகும் என்றும் சில சிவாலயங்களில் தெரிவித்துள்ளனர்.

ஐப்பசி மாத பௌர்ணமி இன்று அக்டோபர் 28ம் தேதி அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கி நாளை அக்டோபர் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருவண்ணாமலை திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

இந்நிலையில் இன்று அதிகாலை கிரிவலம் செல்வதற்காக நேற்று இரவு முதலே திருவண்ணாமலைக்கு வர துவங்கினர். அதே போன்று சதுரகிரி மலையேறவும் பக்தர்கள் வர துவங்கியுள்ளனர். 

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஐப்பசி மாதத்தில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web