உஷார்.. பட்டாசால் காற்றின் தரம் படுமோசம்... சுவாச பிரச்சனை ஏற்படலாம்...!!

 
மாசு கட்டுப்பாடு

தமிழகத்தில் நேற்று தீபாவளியை முன்னிட்டு புத்தாடை ,  பட்டாசுகள்   இனிப்புக்களுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசுகள் வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் நாள் முழுவதும் பட்டாசுகள் வாண வேடிக்கைகள் என கொண்டாடித் தீர்த்தனர்.  இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் காற்று மாசு அளவு வழக்கத்தைவிட மோசமாக உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்  கவலை தெரிவித்துள்ளது.

மாசு கட்டுப்பாடு


சென்னையில் நேற்று காற்று மாசு 170ஆக இருந்த நிலையில், விடிய வடிய வாணவேடிக்கை தான்.  இதனால்  காற்றின் தரம் மேலும் மோசமடைந்து தரக்குறியீடு 200ஐ கடந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆகவும், வேளச்சேரியில் 301 ஆகவும், அரும்பாக்கத்தில் 260 ஆகவும், ஆலந்தூரில் 256ஆகவும், ராயபுரத்தில் 227 ஆகவும் பதிவாகியுள்ளது.

பட்டாசு


பட்டாசு வெடிக்க அரசு தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டபோதும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பொது மக்கள் பட்டாசு வெடித்தனர். காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, என்ஒ2, எஸ்02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.   காற்று மாசு அதிகரிப்பு எதிரொலியால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படக்கூடும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web