ஓணம் எதிரொலி... உச்சம் தொட்ட விமானக் கட்டணங்கள்... !

 
ஓணம்
 

நாளை செப்டம்பர் 5 ம் தேதி வெள்ளிக்கிழமை கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை  விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும்  கேரள மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊரில் குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ரயில்களில் ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில்  ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக உள்ளதால் கேரள மக்கள், விமானங்களில் சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்

இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. A இதையடுத்து விமான கட்டணங்களும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து உள்ளன. அதன்படி, சென்னை - திருவனந்தபுரம் விமான கட்டணம் ரூ.4,359லிருந்து  ரூ.19,903ஆக அதிகரித்துள்ளது. 

ஓணம்
சென்னை - கொச்சி இடையே விமான கட்டணம் ரூ.3,713ல் இருந்து ரூ.11,798ஆக அதிகரித்துள்ளது. அதே போல் சென்னை - கோழிக்கோடு இடையேயான விமான கட்டணம் ரூ.3,629லிருந்து  ரூ.10,286ஆக உயர்ந்துள்ளது. பயணிகள் விமான கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல், ஓணம் பண்டிகையை சொந்த ஊரில், குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமானங்களில் பயணித்து  வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?