இந்தியா முழுவதும் 70 விமானங்கள் ரத்து... ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்!

 
ஏர் இந்தியா

 ஏர் இந்தியா ஊழியர்கள்  திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்தியா   முழுவதும் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  இதனையடுத்து  பெங்களூரு- டெல்லி, கோழிக்கோடு- துபாய் குவைத்- தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன

ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்

 ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக ஏர் இந்தியா கண்ணூரில் இருந்து விமான நிறுவனம்  தனது விமானங்களை ரத்து செய்தது. அதன்படி, கண்ணூரில் இருந்து 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கொச்சி விமான நிலையத்திலிருந்து 4 சேவைகள் நிறுத்தப்பட்டன.

ஏர் இந்தியா விமானம்

இந்தியா முழுவதும்  திருவனந்தபுரம் உட்பட  பல விமான நிலையங்களில் இருந்து சுமார் 70 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கச் சிக்கல்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  ஏர் இந்தியா நிறுவனம் அதன் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாகத்தான் ரத்து செய்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web