நாடு முழுவதும் விமான நிலையங்களில் 20ம் தேதி வரை 5 அடுக்கு பாதுகாப்பு... பயணிகள் முன்னதாக வர அறிவுறுத்தல்!

 
விமான நிலையம் பாதுகாப்பு

நாடு முழுவதும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் 20ம் தேதி வரை கூடுதல் பாதுகாப்பு அமலில் இருக்கும் நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன.

நாடு முழுவதும் சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வரும் 20ம் தேதி நள்ளிரவு வரை இது அமலில் இருக்கும்.

சென்னை விமான நிலையம்

இதனால் விமான நிலையத்தின் வெளிவட்ட பகுதியில் சென்னை மாநகர போலீசாரும், உள்வட்ட பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினா் மோப்ப நாய்கள் உதவியுடனும், வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலமும் பரிசோதிக்கின்றனா்.

knife airport விமான நிலையம் கத்தி விமானநிலையம் உள்ளூர்

விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் ரோந்து வந்து கண்காணிக்கின்றனா். விமான பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் விமானத்தில் ஏறும் இடத்தில் கூடுதலாக ஒரு பரிசோதனை நடத்தப்படுகிறது. எனவே உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு 1½ மணிநேரம் முன்னதாகவும். சா்வதேச பயணிகள் 3½ மணிநேரத்துக்கு முன்னதாகவும் வர பயணிகளை அறிவுறுத்தியுள்ளனா்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?