2 குழந்தைகளை நிர்கதியாக்கிய ஆயிஷா... கணவனையும் தவிக்க விட்டு, காதலனுடன் ஹோட்டல் அறையில் தற்கொலை!

 
தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவனைத் தவிக்க விட்டு விட்டு, தன்னுடைய காதலனுடன் இளம்பெண் ஆயிஷா தற்கொலை செய்த விவகாரம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மவுஜ்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு கணவன், மனைவி போல இருவர் நேற்று வந்துள்ளனர். நான்கு மணி நேரத்திற்கு ஓட்டலை புக் செய்த அவர்கள் இரவு நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் ஓட்டல் ஊழியர்கள் கதவைத் தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை.

இதுகுறித்து ஜாஃப்ராபாத் காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் வந்து, ஓட்டல் அறையின் கதவைத் திறந்து பார்த்த போது இருவரும் அறையில் பிணமாகக் கிடந்தனர். தூக்கில் தொங்கியவாறு ஆணும், படுக்கையில் அந்த பெண்ணும் பிணமாக கிடந்தனர்.

வணிவரித்துறை  உதவியாளர்  தற்கொலை

அவர்கள் எழுதி வைத்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், இருவரும் காதலிப்பதாகவும், வாழ்க்கையில் ஒன்று சேர முடியாத தாங்கள், மரணத்தில் ஒன்று சேர்வதாக கடிதத்தில் எழுதியிருந்தது.

விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் பெயர் ஆயிஷா (27) என்றும், ஆணின் பெயர் சோராப்(28) என்பதும் தெரிய வந்தது. சோரப் மீரட்டைச் சேரந்தவர் ஆயிஷா லோனியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள், திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர்.

இளம்பெண்

ஆயிஷாவுக்கு முகமது குல்பாம் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவரது மகனுக்கு 9 வயது, மகளுக்கு 4 வயது. அவரது கணவர் உடற்பயிற்சி உபகரணங்களை விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்த மரணம் தொடர்பாக அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் சோராபின் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள போலீஸார் முயற்சி செய்து வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவால் இரண்டு குழந்தைகளின் தாய், தனது காதலுடன் தற்கொலை செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஐப்பசி மாதத்தில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web